Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான இடமாக விளங்குகிறது.

0

'- Advertisement -

 

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த கல்விக்கான புகலிடம் வியட்நாம்,

இந்திய மருத்துவ மாணவர்களுக்கு வியட்நாம் சிறந்த கல்விக்கான புகலிடமாக விளங்குகிறது என்று திருச்சியில் நடைபெற்ற கல்வி கண்காட்சியில் கூறப்பட்டது.

இது குறித்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில்
கெண்தோ பல்கலைக்கழகத்தின் ரெக்டரான டாக்டர் குயென் ட்ரூங் கியென் மற்றும் ஐரா வெளிநாட்டு ஆய்வுகளின் இயக்குனர் தீபா ஆர்
உள்ளிட்டோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவ மற்றும் பிற மருத்துவ தொடர்பான படிப்புகளை
தொடர்வதற்கான வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வியட்நாம் சிறந்த மருத்துவக் கல்வி உள் கட்டமைப்பு கொண்டுள்ளது.

Suresh

இந்தியாவை போன்று புவியியல் அமைப்பு கலாச்சாரம் மற்றும் மாநிலங்கள் ஒற்றுமைகள் மற்றும் குறைந்த கட்டண அமைப்பு ஆகியவற்றின் காரணமாக இந்திய மருத்துவ மாணவர்களுக்கு சிறந்த இடமாக உருவெடுத்து உள்ளது.

இந்தியாவிற்கும்,வியட்நாமிற்கும் உறவு வலுவாக உள்ளது. இருதரப்பு வர்த்தகம், வளர்ந்து வரும் மக்கள் தொடர்பு மற்றும் கலாச்சாரம் ,
இந்திய பாரம்பரிய உணவு முறைகள் பற்றி ஐரா ஓவர்சீஸ் ஸ்டடிஸ் வியட்நாம் தூதரகத்திற்கு உறுதி அளித்துள்ளது.

இது இந்திய மாணவர்களை சரியான பல்கலைக்கழகங்களுடன் இணைக்க உதவுகிறது.
இவ்வாறு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
கூறினர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.