திருச்சி: மேயர் அன்பழகனை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளிநடப்பு. திமுக கவுன்சிலர் காஜாமலை விஜி ஆதரவு
,
திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் மு.அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை சீரமைப்பு பணிகள், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள்.
குடிநீர் பிரச்சினை, தெரு நாய்கள் தொல்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நகரப்பொறியாளர் பி.சிவபாதம், மண்டலத் தலைவர்கள் மு.மதிவாணன் , துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி துணை ஆணையர்கள், செயற்பொறியாளர்கள் , உதவி ஆணையர்கள் , உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டம் தொடங்கியவுடன் கவுன்சிலர்கள் தங்களது பகுதி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அப்போது 47வது வார்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கவுன்சிலர் செந்தில்நாதன் பேசுவதற்கு வாய்ப்பு கோரினார். ஆனால் தொடர்ந்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன், மேயர் அன்பழகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.கட்சி வாரியாக பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தேன். இன்றும் எனக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. 11:30 மணி வரை தான் குறைகளை தெரிவித்து பேசலாம் என்று தெரிவித்துள்ளீர்கள் என்று கூறினார்.
உங்களுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று மேயர் அன்பழகன் கூறினார். ஆனால் தொடர்ந்து அவருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. மற்ற கட்சி கவுன்சிலர்களே பேசிக் கொண்டிருந்தனர். . இதை தொடர்ந்து கவுன்சிலர் செந்தில்நாதன் தனக்கு பேச வாய்ப்பளிக்காததை கண்டித்து கூட்டத்திலிருந்துமாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
வெளிநடப்பு செய்யும் போது மேயரிடம் தனக்கு வாய்ப்பு வழங்காதது குறித்து வருத்தம் தெரிவித்து விட்டு வெளியேறினார்.
இவருக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் கருத்து தெரிவித்தார். கவுன்சிலர் செந்தில்நாதன் பலமுறை பேச வாய்ப்பு கோருகிறார். கட்சி வாரியாக நேரம் ஒதுக்கி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலருக்கும் பேச வாய்ப்பு அளித்திருக்க வேண்டும் என்று மேயரிடம் காஜாமலை விஜய் தெரிவித்தார்.
மாமன்ற உறுப்பினர் தனது வார்டு பொதுமக்களின் பிரச்சினை குறித்து மாமன்ற கூட்டத்தில் தெரிவிக்க முடியும். இந்த நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கவுன்சிலர் செந்தில்நாதன் வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.