தனது வார்டில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி மாமன்றத்தில் வலியுறுத்தல்
இன்று திருச்சி மாநகராட்சி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க.
மாநகராட்சி தலைவர் அம்பிகாபதி பேசுகையில்
புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் பகுதி முதல் செம்பட்டு வரை நெடுஞ்சாலையில் சாலைகளின் நடுவே விளக்கு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறினார் அதற்கு மேயர் விரைவில் 26 மின்விளக்கு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என கூறினார்.
வயர்லெஸ் ரோடு பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மழைக்காலத்திற்கு முன்பே விரைந்து முடிக்க வேண்டும்.
தற்போது உள்ள சாலைகளால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
எனது வார்டில் உள்ள பசுமை நகரில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் எனவும் அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதி பேசினார்.
சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அதிமுக கவுன்சிலர் அம்பிகாபதிக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மேயர் அன்பழகன் கூறினார்.