தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை வரும் 29ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து, வார விடுமுறை நாட்களும் வருவதால், தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான பொதுமக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, 28ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளோடு சேர்த்து 400 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களில் இருந்து பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 400 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
தொலை தூர பயணம் மேற்கொள்பவர்கள் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்றும் போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதே போன்று, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்தது.
அதன்படி 28ஆம் தேதி இரவு 11.15 மணி சென்னையில் இருந்து புறப்படும் ரயில், திருச்சி, மதுரை வழியாக மறுநாள் காலை 11.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.