நாளை திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகம் திறப்பு விழா. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அறிக்கை.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளரும் 47வது வார்டு கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கழகப் பொதுச் செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் வாழ்த்துக்களுடன்
திருச்சி மாநகர மாவட்ட கழக அலுவலகம் திறப்பு விழா நாளை (25/06/23) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் தென்னூர் அண்ணா நகர்,
வ உ சி சாலை மூர்த்தி மருத்துவமனை அருகே
கழக தலைமை நிலைய செயலாளரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் ராஜசேகரன் முன்னாள் எம்எல்ஏ திருக்கரங்களால் அலுவலகம் திறக்கப்பட உள்ளது.
அது சமயம் இந்த அருமையான நிகழ்வில் மாநில நிர்வாகிகள்,மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள்,மகளிரணி நிர்வாகிகள்,பகுதி கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள்,நகர கழக நிர்வாகிகள்,வட்ட கழக நிர்வாகிகள்,பேரூர் கழக நிர்வாகிகள்,ஊராட்சி கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.