காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம்.
தா.பேட்டையை அடுத்துள்ள காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த இனிய நிகழ்விற்கு சாதனா அறக்கட்டளையின் மாவட்டத் தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையேற்றார். மாவட்டச் செயலாளர் டி.ராஜா முன்னிலை வகித்தார். மகளிர் அணியின் மாவட்ட தலைவி கௌரி ஆனந்தன், யோகா பயிற்சி ஆசிரியர் ராஜா, முசிறி பி கே அம்மன் சிவகுமார், ஆசிரியை தனம் சிவக்குமார் மற்றும் அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கூறினர். உடல் நலம் மட்டுமின்றி மனநலம் பேணவும் யோகா அவசியமாகும் என்று விளக்கினர்.
நோயின்றி வாழ யோகா பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர் .
ஆரோக்கியமான ,
அமைதியான வாழ்க்கை வாழ யோகா பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன். என்று அனைவரும் உறுதி மொழியேற்றனர்.
இந்த இனிய நிகழ்விற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தி. கீதா முன்னிலை வகித்தார்.
நல்லாசிரியர் விருது பெற்றமைக்காக
அறக்கட்டளையின் சார்பில் அவருக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. இதில் பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும் மாணவர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சி ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வை பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் பள்ளி மேலாண்மைக் குழுவினரும் ஊர்ப் பொதுமக்களும் வெகுவாகப் பாராட்டினர்.