காருகுடி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கணினி உள்ளிட்ட மின்னணு பொருட்களை நன்கொடையாக வழங்கிய தொழிலதிபர்.
.
காருகுடி பள்ளிக்கு கணினி வழங்கிய தொழிலதிபர்.
இன்று காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு
ரூ.50,000/- மதிப்பிலான கணினி உள்ளிட்ட உபகரணங்களை தொழிலதிபர் நீலகண்டன் அவர்களின் குடும்பத்தினர் வழங்கினர்.
தா.பேட்டையை அடுத்த காருகுடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டு தற்போது அபுதாபியில் தொழிலதிபராக விளங்கும் நீலகண்டன் அவர்களின் மகள் பிரகதி ,
மருமகன் கௌதம் அமெரிக்காவில் பட்ட மேற்படிப்பு படிக்கும் மகன் கிரிவாசன் ஆகியோர் ரூபாய் 50000 /-
மதிப்பிலான கணினி உள்ளிட்ட மின்னணுப் பொருட்களை பள்ளியின் வளர்ச்சிக்காக தலைமை ஆசிரியர் கீதாவிடம் நன்கொடையாக வழங்கினர் .
மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி நன்கு படிக்கவும் நல்லொழுக்கத்துடன் வாழவும் வாழ்த்தினர் .
சென்ற ஆண்டு நீலகண்டன் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து கல்வியின் அவசியம் குறித்து மாணவர்களிடம் கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது .
இந்த இனிய நிகழ்வில் கல்வியாளர் வீரப்பன், ஆசிரியப் பெருமக்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கிய நிகழ்வை SMC குழுவினர் ,
பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.