Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: சமூகநலத்துறை சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பிரதீப்குமார் தலைமையில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்புதினத்தை முன்னிட்டு அரசுத்துறை அலுவலர்கள். மாணவ, மாணவிகள்

இந்திய குடிமக்களாகிய நாங்கள் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும் மனோரீதியாகவும் உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும்,பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்துபோன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுமைகள் வன்முறைகள் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன் என உறுதிமொழி எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.

இப்பேரணியில் வெஸ்ட்ரி, ஆர்.சி, சேவா சங்கம் ஆகிய மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட சமூக நல அலுவலர் மா.நித்யா, முதன்மைக் கல்வி அலுவலர் ம.சிவக்குமார், மாணவ, மாணவியர்கள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.