திருச்சி முன்னாள் கவுன்சிலர் கஸ்தூரி ரெங்கநாதனின் 16ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் அன்னதானம்.
திருச்சி முன்னாள் திமுக வட்ட செயலாளரும், மாநகராட்சி நிதிக்குழு தலைவரும், திமுக கவுன்சிலருமான உறையூர் பகுதியை சேர்ந்த
கஸ்தூரி ரெங்கநாதனின் 16வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உறையூர் குறத்தெருவில் 23ஆவது வார்டு இளைஞர் அணி அமைப்பாளர் ஜானகிராமன்
ஏற்பாட்டின் பேரில். வட்ட செயலாளர் ரவிச்சந்திரன், வட்டப் பிரதிநிதி ஆகாஷ் (எ)வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் திருச்சி மேயர் அன்பழகன், மாநகர செயலாளர் வைரமணி,
தில்லைநகர் பகுதி செயலாளர் நாகராஜன்,முன்னாள் பகுதி செயலாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் ஏராளமான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக அப்பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட கஸ்தூரி ரங்கநாதனின் திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மழைத் தூவி அஞ்சலி செலுத்தினர்.