தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க
திருச்சி மாநகரக்கிளை துவக்க விழா.

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சி மாநகரக் கிளை துவக்க விழா திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடைபெற்றது.
இளம் எழுத்தாளர் சாய் மகஸ்ரீ வரவேற்றார்.
எழுத்தாளர்கள் சீத்தாவெங்கடேஷ், எட்வின் , வழக்கறிஞர் ரங்கராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
எழுத்தாளர் உதயசங்கர், கார்த்திகா ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
விழாவில் புதிய நிர்வாகிகளாக சுகன்யா ஞானசூரி, செயலாளராக கார்த்திகா கவின் குமார், பொருளாளராக சுபைதா முனாவர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் கவின்குமார் நன்றி கூறினார்.