புதியஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
தமிழ்நாடு பட்டதாரி – முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாநிலபொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி மாநில சிறப்பு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் 1.4.2023க்கு பிறகு தமிழக அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு புதியஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 6 முதல் 10 வகுப்பு வரை கற்றல் – கற்பித்தல் சிறப்புற 2011 – 12ஆம் கல்வி ஆண்டில் வழங்கியதை போல் 6 -8 வகுப்புகளுக்கு 3 ஆசிரியர் பணியிடங்களுக்கும், 9 மற்றும் 10 வகுப்புகளுக்கு ஒரு பாடத்திற்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் என்ற அளவில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கும் குறைந்தது 8 பட்டதாரி ஆசிரிய பணியிடங்களை உருவாக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணியிட நிர்ணயத்தில் உயர்நிலை பள்ளிகளில் உள்ளவாறே, அரசு மேல்நிலை பள்ளிகளிலும் நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.