திருச்சி கருமண்டபம் பகுதி அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ரத்தினவேல், சீனிவாசன், சிறப்பான ஆலோசனைகளை வழங்கினர்.
திருச்சி
கருமண்டபம் பகுதி அதிமுக நிர்வாகிகள்.பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்.
உறுப்பினர் சேர்க்கையை தீவிர படுத்துவது என தீர்மானம்.
திருச்சி மாநகர் மாவட்டம் கருமண்டபம் பகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் எடமலைப்பட்டிபுதூரில் நடைபெற்றது.
பகுதி செயலாளர் கலைவாணன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார்.
மேலும் கழக அமைப்பு செயலாளரும்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் ஆகியோர் தீவிர உறுப்பினர் சேர்க்கை குறித்த சிறப்பான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணை செயலாளர் பத்மநாதன்,வட்டச் செயலாளர்கள் வசந்தம் செல்வமணி கிராப்பட்டி கமலஹாசன்,
கே.சி.பி.ஆனந்த், கருமண்டபம் முத்துக்குமார், கணேசன், பாலு மகேந்திரன்,சிங்கார
வேலன், சரவணன்,அமீர் பாட்ஷா நிர்வாகிகள் என்ஜினியர் இப்ராம்ஷா எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,
சிந்தை ராமச்சந்திரன்,
அண்ணா ஆறுமுகம், சீனிவாசன், பாசறை தினேஷ், நெல்சன்,மகளிர் அணி ராஜலட்சுமி,
பாலக்கரை ரவீந்திரன்,அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து தற்போது அதிமுகவில் இணைந்த முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்ட செயலாளர் வசந்தம் செல்வமணி நன்றி கூறினார்.கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது,பூத் கமிட்டி அமைத்து பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.