
திருச்சியில் தனியார் நிறுவன ஊழியர் குடும்பத் தகராறு காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், கணேசா நகரை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் செந்தில்குமார் (வயது 37). துவாக்குடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்பத் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதில் தனலட்சுமி கடந்தவாரம் தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இரு தினங்களுக்கு முன்பு சென்ற செந்தில்குமார் அவரை வீட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார்.
பிறகு வருகிறேன் எனக்கூறி கணவரை அனுப்பிவைத்து விட்டு தனலட்சுமி வரவில்லையாம். இதில் விரக்தியடைந்த செந்தில்குமார் நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற அவரின் தாயார் வீடு திரும்பியபோது மகன் தூக்கில் தொங்கியது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

