Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.

0

'- Advertisement -

 

திருச்சி விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து கொழும்பு வழியாக வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அதில் வந்த ஆண் பயணி ஒருவர் செருப்பில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.28 லட்சத்து 30 ஆயிரத்து 954 மதிப்புள்ள 467 கிராம் தங்கம் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்தப் பயணியிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.