திருச்சி புறநகர் பகுதிகளில்
நாளை மின் நிறுத்தம்.
திருச்சியில் குறிப்பிட்ட புறநகர் பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மின் விநியோகம் ரத்துசெய்யப்படவுள்ளது.
திருச்சி மாவட்டம் பேட்டைவாய்த்தலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி, அத்துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேட்டைவாய்த்தலை, பழங்காவேரி, பாளையூர்மேடு, தேவஸ்தானம், நங்கவரம், கோட்டையார் தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், தளிஞ்சி, சிறுகாடு, சங்கிலிஆண்டபுரம், எஸ்.புதுக்கோட்டை, சிறுமணி, பெருகமணி, சோழவந்தான்தோப்பு, திருமுருகன் நகர், காந்திபுரம், இனுங்கூர், சுக்காம்பட்டி, பாதிவயல்காடு, மாடுவிழுந்தான்பாறை, எஸ்.கௌண்டம்பட்டி, குறிச்சி, பாறைகட்டி, பங்களாபுதூர், கணேசபுரம், நடைபாலம், பணிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், மே 18 ஆம் தேதி, வியாழக்கிழமை காலை 9 முதல் மாலா 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இத்தகவலை திருச்சி கிழக்கு வட்ட மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.