பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் தள்ளும் திருச்சி பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி கமிஷனரிடம் புகார்.
பெண்களை மிரட்டி பாலியல் தொழிலுக்குள் தள்ளும் யூடியூப் கும்பல் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்டவர்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை, ஈரோடு, கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சேர்ந்த சிலர் திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பது :
திருச்சியைச் சேர்ந்த சித்ரா என்பவர் மக்கள் பார்வை என்ற பெயரில் யூ டியூப் சேனல் நடத்தி வருகிறார்.
அவர் கணவனை இழந்த பெண்கள் மற்றும் கணவர் வெளிநாட்டில், வெளியூரில் பணிசெய்பவர்களின் மனைவியர்களை குறி வைத்து, முறையற்ற பாலியல் (லெஸ்பியன்) தொழிலுக்கு தள்ளிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதற்கு மசியாதவர்கள் மற்றும் அவருக்கு எதிராக செயல்படுவர்களையும் ஏதேனும் குற்றச்சாட்டுகளை சுமத்தி காவல்நிலையத்தில் பொய்புகார் அளித்து போலீசில் சிக்கவைத்து விடுவார்.
மேலும் இதுபோல அப்பெண் அளிக்கும் ஆதாரமில்லா புகார்கள் குறித்து பெண்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கவேண்டும்.
எனவே அந்த பெண்ணையும் அவர் நடத்தும் யூடியுப் சேனலையும் கண்காணித்து, தேவைப்படும் நிலையில் சிபிசிஐடி விசாரணையும் மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மற்ற பெண்களை பாதுகாக்க தனது உயிரைக்கூட இழக்க தயாராக இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் தனலட்சுமி என்பவர் தெரிவித்துள்ளார்.