Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீ குளிக்க முயற்சி.

0

 

திருச்சி பிராட்டியூரில் ஆக்கிரம்புகள் அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பெண் தீ குளிக்க முயற்சி.

திருச்சி- திண்டுக்கல் சாலையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி பிராட்டியூரில் பகுதியில் மாநகராட்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியை சுற்றி மாநகராட்சி இடத்தில் பொதுமக்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியதாக புகார் எழுந்தது.

இந்தநிலையில் அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி இருந்த பொதுமக்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.இந்த வழக்கில் பட்டா உள்ள இடத்தை அளந்து விட்டுவிட்டு மீதி உள்ள இடத்தை மாநகராட்சி எடுத்துக் கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது தொடர்ந்து இன்று மாநகராட்சி சார்பில் அதிகாரிகள், ஊழியர்கள் உதவியுடன் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.இந்த நிலையில்
ஆக்கிரமிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து சத்தம் போட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் அங்கிருந்த ஒரு பெண் வீடுகளை அகற்றக்கூடாது என கூறி பெட்ரோலை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினார்.

Leave A Reply

Your email address will not be published.