திருச்சி பிளஸ் பயிற்சி மையம்
25ம் ஆண்டு விழா. புதிய செயலி அறிமுகம் .
திருச்சி பிளஸ் பயிற்சி மையம் கடந்த 25 ஆண்டுகளாக
வங்கி, SSC, RRB, IELTS, உள்ளிட்ட மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
இதன் 25வது வருட கொண்டட்டம் திருச்சி மத்திய பேருந்த நிலையம் அருகில் உள்ள ரம்யாஸ் ஹோட்டலில் முதன்மை செயல் அதிகாரிகள் சிவக்குமார், சாவித்திரி சிவக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக விஐடி பிசினஸ் ஸ்கூல் ஆலோசகர் முனைவர் ஜெய்சங்கரன், நேச்சுரல் சலோன் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி குமரவேல், அமர் சேவா சங்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ ராமகிருஷ்ண அய்யா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் பயிற்சி மையத்தில் பயிற்சி மேற்கொண்டு தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கலந்து கொண்ட மாணவ – மாணவிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து நிகழ்வில் திருச்சி பிளஸ் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் பயிற்சி மாணவர்கள் மேலும் பயன் பெறும் வகையில் புதிய
திருச்சி பிளஸின் செயலியை அறிமுகப்படுத்தினர்.