திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தையும் மே 1ஆம் தேதி மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் மே தினத்தை முன்னிட்டு மூடப்பட்ட வேண்டும்.
அதன்படி, மே 1 ஆம் தேதி (திங்கள்கிழமை) மதுக்கடைகளை மூட வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை நடைபெறக்கூடாது. மீறி யாரேனும் மதுபான விற்பனை செய்தல், மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கிவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.