Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் செந்தண்ணீர்புரம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி.

0

 

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி .

திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் சேர்க்கைகான பேரணி மக்கள் சக்தி இயக்கம் மற்றும் செந்தண்ணீர்புரம் கல்வி வளர்ச்சிப் பணிக்கு சார்பாக இன்று செந்தண்ணீர்புரம் பகுதிகளில் பேரணி நடந்தது.

மக்கள் சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ தலைமையில் , உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் எழியரசி , தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை தனலெட்சுமி , ஆகியோர் முன்னிலையில் நடந்தது .

மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் வரவேற்றார்.

மாநகராட்சி 35வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ், வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றி பேரணியை தொடங்கி வைத்தனர்.

மாணவர்
சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை, மன்ற செயல்பாடுகள். காலை உணவு, சத்துணவுடன் வாரம் 5 முட்டை வழங்குதல், அரசுப் பள்ளி ஆதரக்களில் தரமான இலவசக் கல்வி வழங்கப்படுவதை பொது மக்கள் அனைவரும் அறியும் வகையில் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.


பள்ளி ஆசிரியர்கள், மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள்
,பள்ளி படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவ, மாணவிகள் மாநகராட்சி பள்ளி அனைவரும் சேர்க்க வேண்டும் , பள்ளியின் உள்ள சிறப்பம்சங்கள் அடங்கி பதாகை ஏந்தி செந்தண்ணீர்புரம் பகுதி வீதிகளில் ஊர்வலமாக வந்தார்கள்.

இதில் பள்ளியின் சிறப்பம்சங்கள் அடங்கிய பிரசுரம் வீடுகள் தோறும் வழங்கப்பட்டது.

மேலும் பேரணியில் ஆட்டோ மூலமும் பிரசாரங்கள் செய்யப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

பேரணியில் பள்ளி முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி விஜயகுமார், சுப்புராஜ், மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் விஜயகுமார், ஆர்.கே.ராஜா, சுந்தர், கல்வி வளர்ச்சிப் பணிக்கு பண்பாளர்கள் உயர்நிலைப்பள்ளி, மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பெற்றோர் கழகம், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.