Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

0

'- Advertisement -

 

பழனிகோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, தமிழகத்திலேயே மிகச் சிறப்பு வாய்ந்த கோவில், தினந்தோறும் குறைந்த பட்சம் ரூபாய் 10 லட்சம் வரை சம்பாதித்து கொடுக்கும் முருகன் வாழும் இடம் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோவிலுக்கு லட்சக்கணக்கில் பக்தர்களும், ஆயிரக்கணக்கில் பணியாளர்களும் வரும் சிறப்பு பெற்ற இந்த கோவிலில்,

தற்போது இணை ஆணையராக பணியாற்றி வரும் நடராஜனால், பக்தர்களின் மர்ம மரணம், தொடர் உண்டியல் திருட்டு,சாதி வெறி, பக்தர்களின் பாதுகாப்பில் அலட்சியம் என பல்வேறு அதிகார துஷ்பிரயோகத்தில் பக்தர்களும் பணியாளர்களும் பீதியில் உள்ளனர்.

இவற்றை எல்லாம் கண்காணித்து பக்தர்களுக்கும், நிர்வாகத்திற்கும் பாதுகாப்பு பாலமாக இருக்கவேண்டும் என்பதற்காக நல்ல நோக்கோடு தமிழக அரசு நியமணம் செய்த அறங்காவர்களும், தமக்கு இராஜ மரியாதை நிர்வாக அதிகாரி கொடுத்தால் போதும், பக்தர்களும், பணியாளர்களும் நாசமா போசுட்டும் என ஒரு படத்தில் வரும் வீரப்பா வசனம் போன்று, தாங்கள் வருவதும், குளு குளு அறையில் தங்குவது, தனியாகரோப்கார்,வின்ச்சில் தமது பரிவட்டங்களுடன் பந்தாவாக சென்று வருவது என்பாட்டாக வாழ்கின்றனர்.

இதற்கு முன்பெல்லாம் குறைகளை தெரிவிக்க இணை ஆணையர் அறையில் நேரம் தெரிவித்து பலகை ஒன்று இருக்கும், அதே போன்று அறங்காவலர்களின்பெயர், விலாசம் மற்றும் தொலை பேசி, அலைபேசி எண்கள் குறிப்பிட்ட தட்டச்சு செய்யப்பட்ட கடித நகல் ஒன்று அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும், ஆனால் தற்போது இணை ஆணையர் அலுவலகத்திலோ, தகவல் பலகையிலோ எதுவும் இல்லாததால் பக்தர்களும், பொதுமக்களும் தங்களது குறைகளை தெரிவிக்க வழிதெரியாமல் விழி பிதுங்கி அலைந்து ளெண்டுள்ளனர்.

இணை ஆணையர் நடராஜன் பகதர்களிடம் பணம் பறிக்கும் நோக்கோடு, கோவிலில் உள்ள அனைத்து கதவுகளையும் அடைத்து விட்டு ஒரே ஒரு கதவை மட்டும் திறந்து வைத்து பக்தர்கள் மயக்கம் அடையும் நிலையில் தரிசனத்திற்கு ரூபாய்100,200 என கையை திருகி பிடுங்காத குறையாக வருவித்தும், அன்னதானத்தில் சாப்பிட வருபவர்களிடம் தமது சமூகத்தைச் சார்ந்தவர்களை அதிகாரிகளாக பணியில அமர்த்தி டேபிள், சேர் போட்டு கட்டாய நன்கொடயினை வசூல் செய்கிறார்.

இது போன்று தன்னிச்சையாகவும், அதிகார துஷ்பிரயோகமும் செய்து வரும் இணை ஆணையரை கண்டித்தும், பக்தர்களின் நலனில் அக்கரை காட்டாத அறங்காவலர்களையும் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கையினை எடுக்க தமிழக அரசு முன்வருமா? என கேள்விகளுடன் பக்தர்களும், சமூக நல ஆர்வலர்களும் கோட்டையை நோக்கி எதிர் பார்த்துக் கொண்டுள்ளனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.