எல்பின் நிறுவன முகவர்களை மிரட்டும் பட்டாசு ராஜா கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி வணிக குற்ற புலனாய்வு பிரிவில் மனு.
எல்பின் நிதிநிறுவன முகவர்களை மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வணிகபுலனாய் காவல்துறையினரிடம் புகார்
திருச்சி மன்னார்புரம் பகுதியில் எல்பின் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் லட்சக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனத்திற்கு முகவர்களாக பல்லாயிரம் பேர் பணியாற்றி பொதுமக்களிடம் நிதி பெற்று வழங்கினர்.
இந்நிலையில் நிறுவனம் கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டது.
பின் சிறிது சிறிதாக முதலீட்டார்களுக்கு பணத்தை திரும்ப தரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில்
முதலீட்டர்களை சட்ட பாதுகாப்பு வழங்குவதாக கூறி தங்களுடன் இணைத்து கொண்ட
மதுரையை சேர்ந்த பட்டாசு ராஜா என்கிற கோவிந்தராஜ், சிவகாசி ஜெயலட்சுமி, திருப்பூர் ஈவன் பொன்ராஜ், ராமநாதபுரத்தை சேர்ந்த மணி பெரியசாமி, கள்ளக்குறிச்சியை சேர்ந்த மோகன்குமார்,
மதுரை சேர்ந்த குறிஞ்சிசெல்வன், திருச்சி சேர்ந்த உஷா, கோபாலகிருஷ்ணன் ஆகியோர்
முகவர்களாக பணிபுரிந்தவர்கள் மீது காவல் நிலையங்களில் பொய்யான புகார் கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக சிலர் சிறை செல்ல நேரிட்டது.
எனவே
முகவர்களை மிரட்டியும், பொய்யான வழக்கு தொடுத்து பணம் பறிக்கும் மேற்கண்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு மாவட்டத்திலுள்ள முகவர்கள் 100க்கு மேற்பட்டோர் இன்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவு ஏடிஎஸ்பி கார்த்திக்குமாரிடம் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்ற கொண்ட
ஏடிஎஸ்பி கார்த்திக்குமார் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.