திருச்சி மாவட்ட விவசாய இடுபொருள் வியாபாரிகள் சங்கத்தின் பொது குழு மற்றும் குடும்ப விழா திருச்சிமத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.
திருச்சி இணை வேளாண்மை இயக்குனர் முருகேசன், திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் மாநில தலைவர் மோகன், மாநிலச் செயலாளர் சத்தியமூர்த்தி, மாநில பொருளாளர் ரவிச்சந்திரன் பொதுக்குழுவில் சிறப்புரை மற்றும் வாழ்த்துரை ஆற்றினர்,
சின்னதுரை வரவேற்புரை ஆற்றினார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜா ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
திருச்சி மாவட்ட பொருளாளர் வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார். திருச்சி மாவட்ட இணை செயலாளர் சிவசுப்பிரமணியன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என பலர் இந்நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ரெக்ஸ் அந்தோணி ராஜ் நன்றியுரை ஆற்றினார்.