திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே இன்று நடந்தது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆறாவது மற்றும் ஏழாவது மத்திய ஊதிய குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மத்திய அரசு அறிவித்த அகவிலைப்படியினை நிலுவையின்றி அறிவித்த தேதியில் இருந்தே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். சுப்பிரமணியன் வரவேற்றார். நிர்வாகிகள் அழகர், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அருமை கண்ணு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர் இன்று மாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்தார். மாவட்ட செயலாளர் செல்வகுமார், ஆல்பர்ட் சகாயராஜ்,மாவட்ட பொருளாளர் விவேகானந்த் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.