திருச்சி கப்புச்சின் பல் நோக்கு சமூக பணி மையம் சார்பில் மகளிர் தின விழா.
திருச்சி கப்புச்சின் பல்நோக்கு சமூக பணி மையம் சமுதாயத்தில் பின் தங்கிய மாணவ மாணவிகள், பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் ஆகியோர்களுக்கு தையல் பயிற்சி ,கம்ப்யூட்டர் பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது .
இம்மையத்தின் சார்பில் இன்று மகளிர் தின விழா இயக்குனர் பவுல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
விழாவையொட்டி மகளிர்க்கு பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிறுவனத்தின் சார்பில் இலவச தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் தொழிலாளர் துறை இணை ஆணையர் திவ்யநாதன்,தமிழ்நாடு அறிவியல் கழக சாந்தி,சதீஷ்குமார்,கடைக்காதே சேர்ந்த சுனிதா, ஆயிஷா பாத்திமா, லாரன்ஸ், மைய உதவி இயக்குனர் சாமுவேல், ஒருங்கிணைப்பாளர் ஜேக்கப் மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.