மலைக்குடிபட்டியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை: மருமகள் கைது.
மலைக்குடிபட்டியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகே உள்ள மலைக்குடிபட்டியைச் சேர்ந்தவர் வேலு மனைவி பழனியம்மாள் (வயது 75) இவரது மருமகள் கணகு(வயது 42)
க/பெ.சுப்பிரமணி. இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பழனியம்மாள் தனது மருமகள் கணகிடம் தேநீர் கேட்டுள்ளார் தேனீர் கொடுக்கும் போது ஏன் ஆறி போய் உள்ளது என்று கேட்டு மருமகளை திட்டியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த மருமகள் கணகு அருகில் கிடந்த சைக்கிள் பழுது நீக்கும் இரும்பு கம்பியை எடுத்து பழனியம்மாளை தலையில் தாக்கியுள்ளார், இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி பழனியம்மாள் உயிர் இழந்தார்
இதனைத் தொடர்ந்து இலுப்பூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவிட்டு மருமகள் கணகுவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.