திருச்சியில் அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நீண்ட காலமாக சிறையில் வாடும் அப்பாவி சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்,
ஹரியானாவில் இரண்டு இஸ்லாமிய ஏழை வாலிபர்களை எரித்துக் கொன்ற சஸ் பரிவார பஜ்ராங் தள் கும்பல்களை கைது செய்ய வேண்டும்,
அசாமில் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தை காரணம் காட்டி இஸ்லாமியர்களை கொத்துக்கொத்தாக கைது செய்வதை கண்டித்தும் அகில இந்திய முஸ்லிம் லீக் சார்பில் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஐனுல்லா மகுது தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ஷேக் அப்துல்லாஹ், மாநில பொதுச் செயலாளர் ஜாவித் உசேன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.