Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஹக்கீம் கல்யாண பிரியாணி கடையில் அலப்பறைகள்: வழக்கறிஞர் கிஷோர் குமார்.

0

'- Advertisement -

 

திருச்சி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


திருச்சி ஹக்கீம் கல்யாண பிரியாணியின் அலப்பரைகள்.

சமிப காலத்தில் திருச்சி பிரியாணி பிரியர்களின் தரத்திலாகட்டும், விலையிலாகட்டும் சிறப்புற திருச்சி மாநகரில் பல கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருகிறது திருச்சி ஹக்கீம் கல்யாண பிரியாணி.

ஆனால் பில்லுடன் பிரியாணி ஒரு விலையும் , பில் இல்லாமல் ஒரு விலையுமா திருச்சி ஹக்கீம் கல்யாண பிரியாணி கடையில் விற்க்கப்படுவதாக குற்றசாட்டப்படுகிறது.

[05.03.2023]ந் தேதி மதியம் சுமார் 12.00 மணிக்கு திருச்சி பாலக்கரையில் உள்ள ஹக்கீம் கல்யாண பிரியாணி கடைக்கு ஒரு படி மட்டன் பிரியாணி வாங்க சென்ற வாடிக்கையாளரிடம் ஒரு படி மட்டன் பிரியாணி ₹.2700/- என கடை ஊழியர்கள் சொல்லியுள்ளார்கள். மேற்படி தொகையை கார்டு மூலம் கொடுத்த வாடிக்கையாளரிடம் கார்டு மூலம் பிரியாணிக்கான பணத்தை எடுத்தால் கூடுதலாக 150 ரூபாய் ஆகும்.

அதாவது ஒரு படி மட்டன் பிரியாணி ரூ.2850/- அதிகமாகும் என தெரிவித்துள்ளார்கள் கடை ஊழியர்கள். இதனை தொடர்ந்து ரொக்கமாக மேற்படி பிரியாணிக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

இது மட்டுமின்றி ஒரு படி மட்டன் பிரியாணி பிளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து கொடுப்பார்களாம். ஆனால் இந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரியாணிக்கான பாத்திரம் கொண்டு சென்றும், பிளாஸ்டிக் டப்பாவை வாடிக்கையாளர் கொடுக்க மறுத்துவிட்டதாக வேதனை தெரிவிக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.

ஒரு சிறந்த ஸ்தாபனம் பல கிளைகளை உருவாக்குவதில் வளர்ச்சி இல்லை. மாறாக வாடிக்கையாளர்கள் மனநிறைவை அதிகரிப்பது அவசியம்.

இந்த வருமான வரிதுறையெல்லாம் செயல்படுகிறதா என தெரியவில்லை.

என வக்கீல்.Ra.கிஷோர்குமார் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.