
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.ம.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் திருச்சி எடத்தெரு அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாலக்கரை பகுதி செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம்,பாசறை தலைவர்,கவுன்சிலர் செந்தில்நாதன், நிர்வாகிகள் பழனிமாணிக்கம், டோல்கேட் கதிரவன், ராஜா ராமநாதன், பஷீர்அகமது, குணசேகரன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கூட்டத்தில் நிர்வாகிகள் முதலியார் சத்திரம் ராமமூர்த்தி, வேதாந்திரிநகர் பாலு, கமுருதீன், எடத்தெரு எம்.கே. குமார்,செந்தில்குமார், வக்கீல் தினேஷ் பாபு, எனர்ஜி அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரிவு செயலாளர் நல்லதுரை, தலைமை கழக பேச்சாளர் சுப்ரமணியன் ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் முன்னாள் அரசு தலைமை கொறடா,கட்சியின் பொருளாளர்,திருச்சி மாநகர்,மாவட்ட செயலாளர் மனோகரன் கலந்து கொண்டு பேசியதாவது:

ஜெயலலிதா எப்படிப்பட்ட தலைவராக இருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவரது மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியை வழிநடத்த சசிகலா,டிடிவி தினகரன் இருந்தார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இடையில் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தினார்.
அதன் பிறகு அதிமுக கட்சி வலுஇழந்து தற்போது வரை காணப்படுகிறது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் கூறியதை நிறைவேற்றவில்லை பொதுமக்களுக்கு திட்டங்களை அளிக்காமல் மாறாக துன்பங்களை வழங்கி வருகிறார்கள். விலைவாசி, மின் கட்டணம்,சொத்து வரி உயர்வு இப்படி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் கொள்கைகளை நிறைவேற்ற தமிழகத்தின் முதலமைச்சராக டிடிவி தினகரனை கொண்டு வர வேண்டும் இவர் மனோகரன் பேசினார்.
கூட்டத்தில் நிர்வாகிகள் பொன்மலை சங்கர், தனசிங்,கல்நாயக் சதீஷ்குமார்,சேட்டு சாத்தனூர் வாசு, பாக்யராஜ் எடத்தெரு ரவிச்சந்திரன், சாந்தா, சந்திரசேகர், ஜெகதீசன், வெங்காயமண்டி செந்தில்குமார்,ரவி, ராகவேந்திர பிரபு, உமாபதி,பிரான்சிஸ் ராஜா உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.

