திருச்சி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் அமுமுக இளைஞரணி செயலாளர் பேராசிரியர் பாபு.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் முன்னிலையில்.. திருச்சி புறநகர் தெற்கு அமமுக மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் பேராசிரியர் அ.பாபு அஇதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார்.
இந்த நிகழ்வில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ்.கே.டி.கார்த்திக், திருவெறும்பூர் பகுதி கழக அவைத்தலைவர் முருகானந்தம், ஒன்றிய கவுன்சிலர் பொய்கைக்குடி த.முருகா, திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் அண்ணாதுரை, வட்ட கழக செயலாளர் முத்துக்குமார், கழக நிர்வாகிகள் லலிதா, துரை, சேட்டு, ஜமால் பாத்திமா, வெண்ணிலா சேகர், ஆட்டோ ரபீக், மற்றும் கழக முன்னோடிகள் உடனிருந்தனர்.

