ஜல்லிக்கட்டு டோக்கன் விநியோகப் பிரச்சனை, ஆலத்தூர் பொதுமக்கள்,விழா கமிட்டியினர் இரவு ஒன்று திரண்டு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் செய்வதறியாது தவித்து சமாதானப்படுத்தி அனுப்பிய வருவாய்த்துறையினர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூரில் வரும் 19ஆம் தேதி(நாளை) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஊர் முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் செய்து வரும் நிலையில் டோக்கன் விநியோகத்தில் வருவாய் துறையினர் சிலர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் மற்றும் ஆலத்தூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியினர் இலுப்பூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆன்லைன் டோக்கன் விநியோகத்தில் வருவாய் துறையினர் முறைப்படி டோக்கன் விநியோகம் செய்யவில்லை என்றும் 750 டோக்கன் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்துவிட்டு கூடுதலாக 150 டோக்கன் பதிவிறக்கம் செய்து வருவாய் துறை அதிகாரிகள் மூலம் வேண்டியவர்களுக்கு விநியோகம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி விழா கமிட்டியினர் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இலுப்பூர்-புதுக்கோட்டை சாலையில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டு பின்னர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ஆர்டிஓ குழந்தைசாமி, தாசில்தார் வெள்ளைச்சாமி உள்ளிட்ட வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையானது நள்ளிரவு 2 மணி வரை நீடித்தது இதில் பதிவிறக்கம் செய்த டோக்கனில் மட்டும் காளைகள் அடைக்கப்படாமல் விழா கமிட்டியினர் அறிவுறுத்தும் சில காளைகளையும் அடைக்க வருவாய்த்துறையினர் உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் இலுப்பூரில் இரவு நேரத்தில் ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது