சென்னை மெரினா கடலில் கருணாநிதி பேனா சிலை அமைக்க கூடாது
பா.ஜ.க சிறுபான்மையினர் அணி மாநில செயற்குழுவில் தீர்மானம் .
பா.ஜ.க சிறுபான்மையினர் அணி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் மாநில தலைவி டெய்சி தங்கையா தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் சிறுபான்மையினர் அணி தேசிய தலைவர் ஜமால் சித்திக்,அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பா.ஜ.க பொதுச்செயலாளர் முருகானந்தம்,சிறுபான்மையினர் அணியின் தேசிய தலைவர்கள் நோபல் மேத்யூ, வேலூர் இப்ராகிம், சுமித் ஜார்ஜ், திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
சிறுபான்மையினர் அணி மாநில துணைத்தலைவர் ஏ. ஆர்.பாட்ஷா கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்த கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் தமிழக முழுவதிலும் இருந்து கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு :-
தமிழக முழுவதும் கஞ்சா விற்பனையை, கஞ்சா கடத்தலை தடுக்க முடியாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வது,சென்னை மெரினா கடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பேனா அமைப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்,கன்னியாகுமரியில் பன்னாட்டு விமான நிலையம் அமைத்திட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையை தொடங்கிட வேண்டும் ,தென் தமிழகத்தில் பனை மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த கயவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரத்தில் உள்ள ராம் சேது பாலத்தை இந்திய தேசிய புராதான அடையாளமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.