திருச்சி:ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரி விழாவுக்கு தடை கோரி கமிஷனருக்கு ம நீ ம வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை.
ஈஷா யோகா மையம் சார்பில் திறந்தவெளியில் நடைபெற உள்ள சிவராத்திரி விழாவுக்கு தடை விதிக்க கோரி திருச்சி மக்கள் நீதி மய்யம் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் போலீஸ் கமிஷனருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
.திருச்சியில் குடியிருப்பு மற்றும் மருத்துவமனைகள் நிறைந்த பகுதியில் ஈஷாவின் சிவராத்திரி விழா ஏற்புடையது தானா…?
அனைத்து துறைகளுமே வளர்ச்சியை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கையில் சமிபத்திய ஆன்மீக வளர்ச்சி கொஞ்சம் டிபரன்ட். எப்படினு கேட்கிறீர்களா ? சிவராத்திரி விழாவுக்கு வந்தால் மந்திரித்த உத்ராட்சம் இலவசம் என்பது தான்.
இது வெறும் சாம்பில் தான் ஒரே இடத்தில் 108-வைணவ திருத்தலத்தையும் ஒரே மண்டபத்தில் காசு வாங்கி சேல்ஸ் செய்த கூட்டமெல்லாம் திருச்சியில் உண்டு.
சரி சப்ஜெக்ட்டுக்கு வருவோம். ஈஷா யோகா மய்யம் சார்பில் இன்று 17.02.2023 அன்று திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள தனலெட்சுமி சீனிவாசன் பள்ளி மைதானத்தில் விடிய, விடிய சிவராத்திரி விழா நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஷா சார்பில் சிவராத்திரி விழா நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த இடம் சமிபத்திய வளர்ச்சி காரணமாக நூற்றுக்கணக்கான அடுக்குமாடி உள்ளிட்ட குடியிருப்புகள் நிறைந்துள்ளன. மேலும் இந்த பகுதியில் அட்லஸ் மருத்துவமனை மற்றும் நியூரோ ஒன் மருத்துவமனை, மனநல மருத்துவமனை போன்ற மருத்துவமனைகள் அருகருகே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிசப்தமான இரவு நேரத்தில் சிறிய சத்தம் ஏற்பட்டால் கூட சாதாரணமானவர்களுக்கு பெரிய பாத்திப்பை ஏற்படுத்தும், அதுவும் நோயாளிகளுக்கு சொல்லவே வேண்டாம். மேலும் ஈஷா சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி விடிய, விடிய நடத்தப்படுவதோடு, திறந்தவெளி மைதானத்தில் நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.
திருச்சி மாநகரில் ஒரு கட்சி கொடி கம்பம் ஏற்றுவதற்கு அனுமதி மறுக்கும் மாநகர காவல்துறை இது போன்ற கார்பரேட் நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரத்தில் திறந்த வெளியில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அனுமதியளித்துவிடுவது ஆச்சர்யம்.
எனவே திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிவராத்திரி நன்னாளில் குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகள் நிறைந்த பகுதியில் இரவு திறந்தவெளி மைதானத்தில் ஈஷா யோக மையம் என்ற தனியார் நிகழ்ச்சியால் பொதுமக்களின் இரவு நேர பொது அமைதிக்கு ஆளாவதோடு, மேற்படி திறந்தவெளி நிகழ்ச்சியால் மேற்படி பகுதியில் குடியிருக்கும் நபர்களின் இரவு நேர தூக்கம் மிகக்குறைவாக நோயாளிகள் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மேற்படி நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது. நிகழ்ச்சியை உள்ளரங்கில் நடத்த அனுமதியை மாற்றியமைத்து உத்தரவிட மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என வழக்கறிஞர் கிஷோர் குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.