Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினருக்கு அள்ளிக்கொடுப்பவர் திமுக நிர்வாகிகளுக்கு கிள்ளி கூட கொடுப்பதில்லை திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ.வட்ட செயலாளர்கள் புலம்பல்.

0

'- Advertisement -

 

2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் மகேஷ் பொய்யாமொழி போட்டியிட இருந்த  நிலையில் பல உள்ளடி வேலைகள் செய்து கிறிஸ்தவ நல்லெண்ணெ இயக்க தலைவர் இனிகோ இருதயராஜ் கிழக்கு தொகுதி திமுக சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெறுவதற்காக கிழக்கு தொகுதியில் உழைத்த திமுகவினரை குறிப்பாக பகுதி செயலாளர், வட்ட செயலாளர்கள் யாரையும் இவர் கண்டு கொள்வதே இல்லை என்பதுதான் இன்றைய வேதனையான விஷயம்.

இவரது பி.ஏ. கெவின் மூலம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட ஒப்பந்ததாரர்கள் அனைவரிடமும் (எந்த பணி என்றாலும் சரி) கறாரக பேசி கமிஷனை பெற்று விடுகிறார் இனிக்கோ.ஆனால் எம்எல்ஏவுக்கு தெரியாமல் ஒப்பந்ததாரர்களை மிரட்டி சம்பாதிக்கும் பி.ஏ.கெவின் என செய்தியை பரவ விட்டு தன்னை நல்லவன் போல் காட்டிக் கொள்கிறார்.

மரக்கடை, காந்தி மார்க்கெட், காஜா பேட்டை ஆகிய பகுதிகளில் பத்தடி நீளத்திற்கு பேருந்து நிறுத்தம் அமைத்து அதற்கு தலா ரூ15 லட்சம் என ரூ.45 லட்சம் என பில் போட்டு இந்தப் பணியில் மட்டும் மட்டும் பல லட்சம் எம்எல்ஏவுக்கு கிடைத்துள்ளது.

தற்போது
ரஞ்சிதபுரம் பேருந்து நிறுத்த பணியிலும் பல லட்சம் பெற்றுள்ளார்.

இப்படி திமுகவை வைத்து பல கோடி சம்பாதித்தாலும் கட்சிக்காகவும், தனக்காக கிழக்கு தொகுதியில் உழைத்த திமுக தொண்டர்களையும் சரி, நிர்வாகிகளையும் சரி இவர் கண்டு கொள்வதே இல்லை.

ஆனால் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அள்ளி கொடுத்து வருகிறாராம்.

அரியமங்கலம் கோட்ட தலைவர் பதவி கள்ளருக்கு (கொட்டப்பட்டு தர்மராஜ்) தர முடியாது எங்கள் சமுதாய கிறிஸ்தவ வெள்ளாளர் தான் அப்பதவியில் வர வேண்டும் என கூறி திருச்சி மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் புஷ்பராஜின் (வெள்ளாளர்) மனைவி ஜெய நிர்மலாவை அரியமங்கலம் கோட்டத் தலைவர் ஆக்கினார் (ஆனால் இவர் வெள்ளாளர் கிடையாது இந்து ஐயர் ஆவார்)

தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் கிறிஸ்தவர்கள் வாழும் பகுதியில் மற்றும் கிறிஸ்தவ சர்ச்சுகளில் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் ஜாதி மதம் பாகுபாடு பார்க்காமல் தொகுதி மக்களுக்காக உழைக்க வேண்டும் ஆனால் இவர் ஜாதி மாதம் பார்த்தே பழகக் கூடியவர்.பின் எப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் செய்வார்?

இதுகுறித்து வட்டச் செயலாளர் கூறும்போது:
திருச்சி கிழக்குத் தொகுதியில் இவரை வேட்பாளராக அறிவித்த போதே எங்களுக்கு ஒரு வித நெருடல் ஏற்பட்டது.ஆனால் அதை எல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமை அறிவித்த வேட்பாளர் வெற்றி பெற செய்ய வேண்டும் என இரவு பகல் பார்க்காமல் இவருக்காக உழைத்தோம்.ஆனால் இன்று இவர் எங்களை கண்டு கொள்வதே இல்லை.நம் கட்சி வெற்றி பெற்றால் நமக்கு ஏதாவது சிறு சிறு ஒப்பந்த பணிகள் எடுத்து தருவார் நாம் இதை வைத்து கட்சி பணி ஆற்றலாம் என நினைத்தால் அனைத்து மாநகராட்சி ஒப்பந்தங்களையும் அவர் மதம் அல்லது இனம் சார்ந்தவர்களுக்கு பி ஏ கெவின் மூலம் அப்பணியை கொடுத்து வருகிறார்.நாங்கள் எந்த வேலையும் இல்லாமல் அதிமுக ஆட்சியின் போது எப்படி இருந்தமோ அதே போல் இப்போதும் இருக்கிறோம் என கண் கலங்கினார்.

அவரது கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தினர் சென்றால் அள்ளிக் கொடுக்கும் இனிக்கோ எங்களைப் போன்ற திமுகவினர் சென்றால் கிள்ளி கூட கொடுப்பதில்லை எனக் கூறினார்.

 

தற்போது இவர் கிழக்கு தொகுதி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.