திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாபெரும் மக்களை தேடி மருத்துவ முகாமை துணைவேந்தர் துவக்கி வைத்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாமை துணைவேந்தர் துவக்கி வைத்தார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் வழிகாட்டுதலின் படியும், பதிவாளர் ஆலோசனைப் படியும் பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டலம் சார்பாக திருச்சி மாவட்ட பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து மக்களை தேடி மருத்துவம் முகாம் இன்று (17.02.2023) பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நடைபெற்றது.
இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் தலைமை ஏற்று துவக்கி வைத்து மக்களைத் தேடி மருத்துவத்தின் சிறப்புகள் பற்றி சிறப்பு உரையாற்றினார். இந்த நிகழ்வில் பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கணேசன், தேர்வு நெறியாளர் பேராசிரியர் சீனிவாச ராகவன், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர். வெற்றிவேல் மற்றும் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
திருச்சி நவல்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் பாலாஜி அவர்களின் மேற்பார்வையில், 40க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் வருகை தந்து மக்களை தேடி மருத்துவ முகாமை சிறப்புற நடத்தினர். இந்த முகாமில் பல் மருத்துவம், நீரிழிவு நோய் மருத்துவம், கண் மருத்துவம், இயற்கை மருத்துவம் மற்றும் அனைத்து விதமான உடல் பரிசோதனைகளும் செய்யப்பட்டு தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது. மேலும் பத்து வயதில் இருந்து 19 வயது வரை உள்ள அனைவருக்கும் குடல் புழு நீக்க மாத்திரைகள் கொடுக்கப்பட்டன.
இந்த முகாமில் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆசிரியர்கள். ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களது உடல்களை பரிசோதனை செய்து கொண்டனர்.