திருச்சியில் தென்னூர் மண்டல் பாஜக செயற்குழு கூட்டம்.
பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டம் தென்னூர் மண்டல் செயற்குழு கூட்டம் தென்னூர் மண்டல் தலைவர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது.
செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இல. கண்ணன், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் பிரசன்னா, இளங்கோ, ஊடகப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சிவக்குமார், வர்த்தக பிரிவு தீபக், மகளிர் அணி ஈஷா மண்டல் பொதுச் செயலாளர் ரமேஷ், துணை தலைவர் ராஜேஷ் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை, கட்சியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.