Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி:20 அடி உயர அரச மரம் சாய்ந்தது. விழுந்த மரத்தை தண்ணீர் அமைப்பினர் நட்டு வைத்தனர்.

0

 

சாய்ந்த விழுந்த அரசமரத்தை தண்ணீர் அமைப்பினர் நட்டு வைத்தார்கள்.

2018 ஒசோன் தினத்தில் 9 அடி உயரம் உள்ள அரச மரக்கன்றை பொன்மலை ரயில்வே படிப்பக மன்றத்தில் தண்ணீர் அமைப்பினரால் நட்பு வைக்கப்பட்டது. அது 20 அடி உயரத்து மேல் வளர்ந்து இருந்தது.

அந்த மரத்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஜெசிபி முலம் இடித்து சாய்த்து விட்டார்கள், இதை பார்த்த தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி. நீலமேகம் தலைமையில், ரயில்வே படிப்பக மன்றத்தில் பணிபுரியும் சம்பு, தியாகராஜன், சார்லி பாக்கியராஜ் மற்றும் பலர் சேர்ந்து கிளைகளை கழித்து சாய்ந்த மரத்தை நிமிர்த்தி நட்டு வைத்தார்கள் .

 

மரங்களுக்கெல்லாம் அரசன் அரசமரம். நன்கு வளர்ந்த அரசமரம், அதிகபட்சமாக சுமார் நூறு அடி உயரமும் பத்தடி குறுக்களவும் கொண்டவையாக வளரும் பெரியமரம் இது. இவற்றின் பலனும் மிகப்பெரியது. அதனால்தான் நமது முன்னோர்கள் அவர்களின் வாழ்க்கையில் இம்மரத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்துள்ளனர்…

எந்தச் சூழ்நிலையிலும் யாரும் இதை வெட்டிவிடவே கூடாது என்பதற்காகவே இதை வணக்கத்திற்குரிய கடவுள் நிலையில் வைத்திருந்தது தமிழ்ச்சமூகம். வேறு எந்தக்காரணத்தைச் சொன்னாலும் வெட்டிவிடுவார்களோ என்கிற அக்கறைகூட அதன்கீழே சாமிசிலைகளை நட வைத்திருக்கலாம். அவ்வளவு முக்கியத்துவமும் சிறப்பும் பெற்றதே அரசமரம்…

இனியாவது இதன் மகத்துவத்தை உணர்ந்து வேறு அன்னிய மரங்களைத் தவிர்த்து, வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் நமது மண்ணின் மரமான அரசமரத்தினை நட்டு இந்த பூமியை குளிர்வித்து, மழையை ஈர்த்து சுகமாக நல்ல காற்றினை வரும் தலைமுறையை சுவாசிக்கச் செய்வோம். நீரைப்போல் காற்றையாவது காசுகொடுத்து வாங்காமல் இருப்போம் என தண்ணீர் அமைப்பினர் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.