திருச்சி :வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் திருட்டு.
வாலிபர் கைது – ஒருவர் தப்பி ஓட்டம்
திருச்சி உறையூர் எடத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று விட்டார். பின்னர் நேற்று வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த கட்டிங் மெஷின், டிரில்லிங் மெஷின் உள்ளிட்ட பொருள்கள் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து பழனிவேல் உறையூர் போலீசில் புகார் செய்தார். இதன் பெயரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக திருச்சி உறையூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த தீபன் ராஜ் என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது மேலும் சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த முகம்மது இப்ராகிம்சா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.