
தமிழ் புலிகள் கட்சியின் திருச்சி மத்திய மண்டல செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி உறையூர் பழைய வார்டு 59 புதிய வார்டு 9 மேற்கு சட்டமன்ற உறுப்பினரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும்,திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் அலுவலகத்தின் அருகிலுள்ள மேட்டுத் தெரு மெயின் ரோட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் மாநகராட்சியால் தார் சாலை போடப்பட்டது. ஒரு மாதம் கூட ஆகவில்லை
தார் சாலை முழுவதுமாக பெயர்ந்து வந்துள்ளன. இதனால் பொது மக்கள் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முடியவில்லை கீழே விழுந்து சிறு சிறு காயங்களுடன் செல்கின்றனர்.
அமைச்சர் அலுவலகம் அருகே போடப்பட்ட சாலையே இந்த நிலை என்றால் மற்ற இடங்களில் புதிதாக போடப்படும் தார் சாலைகள் எப்படி இருக்கும் என பார்த்துக் கொள்ளுங்கள்.
மக்களின் வரி பணம் வீண். நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி நிர்வாகம் எதையுமே கண்டு கொள்ளாத நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் ஆணையர் தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டலச்செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

