Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: ஏரி குளங்களில் மீன் பிடிக்க பொது ஏலம் விடுவதை தடை செய்ய மக்கள் சக்தி இயக்கம் கோரிக்கை.

0

'- Advertisement -

 

திருச்சி மாவட்டத்திலுள்ள ஏரிகள், குளங்களில் மீன் பிடிக்க பொது ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும் – மக்கள் சக்தி இயக்கம்

திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஏரிகள் மற்றும் குளங்களில் தண்ணீர் உள்ள நிலையில் மீன் பிடிக்க ஏலம் விட உள்ளதாக தகவல் இதனை மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்த வேண்டுகிறோம்.

புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் வரும் தண்ணீர் நிரம்பும் குளங்கள் அனைத்தையும் ஏலம் விடுவதாக தகவல், விவசாயத்திற்கும், பறவைகளுக்கும் பொதுமக்கள் நிலத்தடி நீர் உயர்வதற்கும் இந்த தண்ணீர் பயன்படுகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மீன் பிடிக்க குளங்களை ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டுகிறோம்.

குறிப்பாக புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் – பிரிவு – 1 முலம் வரும் தண்ணீர் நிரம்பும் குளம் கணக்கன்குளம் நடுவில் ரோடு வந்த போது குழாய்கள் பதிக்க வேண்டும் என கூறிய பிறகு குழாய்கள் பதித்தார்கள் .
இந்த குளத்தின் கீழ் 240 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகிறது.

இது போல மாவடிக்குளம், சாத்தனூர் பெரியகுளம், செங்குளம் போன்ற பல குளங்கள் உள்ளது.

 

தனி மனிதர்
குளத்தை ஏலம் எடுப்பவர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தண்ணீரை நிறுத்தி வைத்து விடுவார்கள் அல்லது மீன்கள் பிடிக்க வேண்டும் என அனைத்து தண்ணீரையும் திறந்து விடுவார்கள்.
இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கபடுவார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளையும், பொதுமக்களையும் மனதில் நினைத்து உடனடியாக குளங்களை ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் தண்ணீர் அமைப்பு மற்றும் மக்கள் சக்தி இயக்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

என மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும்,தண்ணீர் அமைப்பு செயல் தலைவருமான கே.சி.நீலமேகம்,

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.