திருச்சியில் ஸ்ரீ செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி
திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியின் நிறுவனச் செயலாளரும், வித்யா சேவா ரத்னம் ஆடிட்டர் ஸ்ரீ சந்தானம் பிறந்தநாள் மற்றும் சாரநாதன் பொறியியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டின் வெள்ளி விழாவை முன்னிட்டும் ஶ்ரீ செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் அ.குமரேசன் சிலம்பம் ஸ்போட்ஸ் அகாடமி சார்பில் 2023ம் ஆண்டிற்கான மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியின் சிறப்பு விருந்தினர் குழந்தைகள் நல மருத்துவர் மாத்ருபூதம் தொடங்கி வைத்தார். சாரநாதன் பொறியியல் கல்லூரியின் செயலாளர் ரவீந்திரன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் திருச்சி, திருவையாறு, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, நாகர்கோயில், பட்டுக்கோட்டை
,சேலம் மாவட்டங்களிலிருந்து இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் ஆசான் அ.குமரேசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும், நன்றி கூறினார்.