திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. திருச்சி ஹாக்கி அகாதெமி சாா்பில் மண்டல அளவிலான சிறுவா் ஹாக்கி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.
திருச்சி அண்ணா விளையாட்டு மைதானம் செயற்கை இழை ஆடுகளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து 14 வயதுக்குள்பட்ட 11 ஹாக்கி அகாதெமி மற்றும் பள்ளிகளைச் சோந்த ஹாக்கி அணிகள் பங்கேற்றன.
இப்போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை முடிவு பெறுகிறது.
நாக்அவுட் முறையில் நடத்தப்படும் இப்போட்டியின் முதல் ஆட்டத்தில் திருச்சி ஹாக்கி அகாதெமி அணி, தஞ்சை டப்போடில்ஸ் ஹாக்கி அகாதெமி அணியை 3 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. போட்டியின் நிறைவில் முதல் மூன்றிடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.