வட மாநில தொழிலாளர்களின் தொடரும் அராஜக போக்கை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்குமா என்கிற கேள்வியை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் எழுப்பியுள்ளார் இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருப்பூர் மாட்டம் – அனுப்பர் பாளையம் – திலகர் நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் கையில் கம்பி, பெல்ட், கற்கள் போன்ற ஆயுதங்களை வைத்து ஒட ஒட விரட்டி தமிழர்களை தாக்கிய வட மாநில தொழிலாளர் கும்பலை மிகவும் வண்மையாக கண்டிக்கிறோம் .
தமிழகம் முழுவதும் இயங்கி வரும் தனியார் நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை வாய்புகள் கொடுக்க படுகிறது .தமிழர்களுக்கு வேலை வாய்புகள் மறுக்க படுகிறது .ஆகவே தனியார் நிறுவனங்களில் பணி புரியும் வட மாநில தொழிலாளர்களை பணியில் இருந்து உடனடியாக நீக்கி அப்பணிகளை தமிழர்களுக்கே கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களுக்கு பணி புரிய வரும் வட மாநில தொழிலாளர்கள் எந்த மாநிலத்திலிருந்து வருகின்றனர் .
வட மாநில தொழிலாளர்களின் ஆவனங்களில் உள்ள முகவரிகளில் அவர்களது குடும்பங்கள் வசித்து வருகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்,
மேலும் வட மாநில தொழிலாளர்கள் மீது வழக்குகள் இருக்கிறதா என்றும் – ரேசன் கார்டு – ஒட்டு ஐடி – ஆதார் கார்டுகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் கொலை – கொள்ளை போன்ற கொடூர செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வட மாநில தொழிலாளர்கள் என்பதை சுட்டிகாட்டு கின்றோம்.
ஆகவே தமிழகத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் வட மாநில தொழிலாளர்களை கூடுதலாக தமிழக அரசு கண்கானிக்க வேண்டும்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்களில் பணி புரிய வரும் வட மாநில தொழிலாளர்கள் பணி புரியும் தனியார் நிறுவனங்கள் அல்லது வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் முகவரியை வைத்து ரேசன் கார்டு – ஒட்டர் ஐடி – போன்றவை வைத்துள்ளனர்கள் . ஆகவே வட மாநிலத்திலிருந்து பணிபுரிய வரும் வட மாநில தொழிலாளர்கள் தமிழக முகவரியில் ரேசன் கார்டு – ஒட்டு ஐடிகள் – வழங்க கூடாது .மேலும் வட மாநில தொழிலாளர்கள் வைத்திருக்கும் ரேசன் கார்டு – ஒட்டு ஐடிகளை ரத்து செய்து தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
எனவே – தமிழர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய வட மாநில தொழிலாளர்கள் கும்பல் மீது சட்ட ரிதீயாக கடும் நட வடிக்கை உடனடியாக எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு காயல் அப்பாஸ் தனதா அறிக்கையில் கூறியுள்ளார்.