தில்லைநகரில் விவாகரத்து பெற்ற வாலிபர் மாயம்.
திருச்சி புதூர் ஸ்ரீனிவாசபுரம் தெற்கு முத்துராஜா தெரு பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 33). எலக்ட்ரீசியன். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.
கடந்த 2018ல் மனைவியிடம் இருந்து குமரவேல் விவாகரத்து பெற்றார்.
அதன் பின் பெற்றோருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக புறப்பட்டுச் சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்ற நிலையில் அவரது தந்தை பிச்சை பிள்ளை உறையூர் போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மகன் குமரவேலை தேடி கண்டுபிடித்து தருமாறு கூறியுள்ளார்.