Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 நாள் அகில இந்திய சமூக அறிவியல் மாநாடு.தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்.

0

'- Advertisement -

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் மாநாடு.ஐந்து நாள் நடைபெறுகிறது.

காணொளி வாயிலாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 5 நாள் சமூக அறிவியல் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டை காணொளி வாயிலாக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

இன்று தொடங்கிய மாநாட்டில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்வம், பதிவாளர் கணேசன், பேராசிரியர் செந்தில்நாதன் உள்பட பேராசிரியர்கள்,கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கருத்துரையாளர்கள், மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 46-வது இந்திய சமூக அறிவியல் 5 நாள் மாநாடு இந்திய அறிவியல் மாநாட்டிற்கு இணையாக நடைபெறுகிறது.

இம்மாநாட்டை சென்னையில் இருந்து காணொளி மூலமாக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தொடங்கி வைத்தார்.
இம்மாநாட்டில் வாழ்க்கை தரத்தை மதிப்பீடு செய்தல், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம், மற்றும் பாகுபாடு, ஒடுக்குதல், வன்முறை, அச்சம் இல்லாத மாண்புடனான வாழ்க்கை, இந்திய மக்கள் அனைவரும் அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு உண்டான விவாதங்களை மைய கருப்பொருளாக கொண்டு இம்மாநாடு நடைபெற்று வருகிறது.

மேலும் இம்மாநாட்டில் அனைத்து தளங்களிலும் ஒருமித்த வளர்ச்சியை உறுதி செய்து அடித்தட்டு சமூகங்கள் பயனடையும் வகையில் பலமான புதிய வளர்ச்சி நோக்கங்களை பொறுப்புணர்வோடு கல்வியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள், ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.
75 ஆவது ஆண்டு இந்திய சுயராஜ்யத்தின் மீதான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் நடக்கிறது.

மேலும் இம்மாநாட்டில் 28 வெவ்வேறு ஆராய்ச்சி குழுக்களில்
21பல்துறை கருபொருட்கள் சார்ந்த குழுக்கள் தேசிய அளவிலான 6 சிறப்பு கருத்தரங்கம், சிறப்பு விவாதங்கள் நடைபெற உள்ளது.

மாநாட்டில் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் கம்பத்தூர் முரளிதர், கேரள மாநிலம் முன்னாள் தலைமைச் செயலாளர் விஜய்ஆனந்த், எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான தங்கஜெயராமன், பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளரான மாலன்நாராயணன், ராணுவ தலைமையக முன்னாள் கூடுதல் இயக்குனர் மேஜர் ஜெனரல் வேம்பத்கரோ, பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகன்கோபால், முன்னாள் தலைமை செயல் அலுவலர் டாக்டர் விவேகானந்தர்,
ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிஅரசர் சந்துரு உட்பட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துரைகளை வழங்கி பேசுகின்றனர்.

இக்கருத்தரங்கள் வழங்கப்படும் ஒவ்வொரு கருத்துக்களையும் தொகுத்து பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை குறித்து அறிக்கையை அந்தந்த துறைகளுக்கு மத்திய மாநில அரசுகள் மூலம் வழங்கப்பட உள்ளது .

இந்த அறிவியல் மாநாடு திருச்சியில் உள்ள தேசிய கல்லூரி,காவேரி மகளிர் கல்லூரி,பிஷப் ஹீபர் கல்லூரிகளில் நடைபெற உள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.