Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இடைத்தேர்தலில் திமுகவின் பண பலத்தை சமாளிக்க கூடிய வேட்பாளரை அதிமுக நிறுத்த வேண்டும்.திருச்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை

0

'- Advertisement -

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை கரூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமான மூலம் திருச்சி வந்தடைந்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது:

இடைத்தேர்தலை பொருத்தவரை அதிமுக தான் பெரிய கட்சி எனவே நாங்கள் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக பேசியுள்ளோம். அதேபோல் ஓபிஎஸ் அவர்கள் என்னை சந்தித்த போதும் நான் அவரிடம் கூறியது எதிர்த்து போட்டியிடக் கூடிய காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள மூன்று அமைச்சர்களின் பண பலம், படைபலம் உள்ளிட்டவற்றை சமாளிக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன் என்றார்.

மேலும் திருச்செந்தூர் கோவிலை பொறுத்தவரை உண்டியலில் சேரும் பணத்தை மட்டுமே எடுத்து அனாவசிய செலவுகள் செய்வதாகவும் குறிப்பாக அதிகாரிகளின் மிக்சர் லட்டு காராபூந்தி போன்ற பலகாரங்களுக்கு செலவிடுவதாகவும் கூறினார்.

தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான இ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்ற கட்சிகளை குறித்து அவர் எவ்வளவு தர குறைவாக பேசினார் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.

குறிப்பிட்டுச் சொன்னால் அந்த மாவட்டத்தின் செயலாளர் கூட அவருக்கு துணை நிற்பதற்கான வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது எனவே இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தம் வேட்பாளர் ஒரு பொதுவானவராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளோம் என கூறினார்.

பேட்டியின் போது திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.