
எந்த திட்டங்களும் கொண்டு வரப்படவில்லை:
திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்
திருச்சி அ.தி.மு.கு. பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் பேச்சு.
எம்ஜிஆர் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் எடமலைப்பட்டி புதூரில் பொதுக்கூட்டம் கருமண்டபம் பகுதி செயலாளர் கலைவாணன் தலைமையில் நடந்தது.முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், பகுதி செயலாளர்கள் நாகநாதர் பாண்டி, முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் துணை மேயருமான சீனிவாசன்,ஆவின் சேர்மன் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால் பேசியதாவது:-
அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்.
தமிழக மக்களின் நலனுக்காக அ.தி.மு.க.
என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்கினார். பின்னர் ஆட்சி கட்டிலில் அமர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு தந்தார். அவரைப் பின்பற்றி ஆட்சிக்கு வந்த புரட்சித்தலைவி ஜெயலலிதா மக்களின் இதயங்களை கவர்ந்தார் . இரு பெரும் தலைவர்களை பின்பற்றி பார் போற்றும் திட்டங்களை எடப்பாடி கே. பழனிச்சாமி தமிழக மக்களுக்கு வழங்கினார்.
இன்றைக்கு பொய்யான வாக்குறுதிகளை தந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள மு.க.ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் கொண்டுவரப்படவில்லை. இதனை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் எதிரொலிப்பார்கள்.
மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு மக்கள் தக்க பாடத்தை புகட்ட காத்திருக்கிறார்கள்.
பண பலம் மற்றும் அதிகார பலத்தை தாண்டி அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பகுதி செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் வெல்ல மண்டி பெருமாள்,அண்ணா தொழிற்சங்கம் ராஜேந்திரன், இளைஞர் பாசறை இலியாஸ், கவுன்சிலர்கள் அரவிந்தன், கோ.கு.அம்பிகாபதி, இன்ஜினியர் ரமேஷ், வட்டச் செயலாளர்கள் கே.சி.பி.ஆனந்த், வசந்தம் செல்வமணி, அமீர் பாஷா, சிங்காரவேலன், கிராப்பட்டி கமலஹாசன், சரவணன், பாலுமகேந்திரன், முத்துக்குமார், கணேஷ் ,பகுதி கழக நிர்வாகிகள் மல்லிகா, ஜானகி, கொடை செல்வம், சீனிவாசன், முத்துலட்சுமி, செல்லப்பாண்டி, கே.சி.மோகன், மற்றும் எடமலைப்பட்டி புதூர் வசந்தகுமார்,
வண்ணார்பேட்டை ராஜன்,அப்பாக்குட்டி,அ.இ. வாசன்,ஜங்ஷன் பகுதி துணை செயலாளர் குருமூர்த்தி, ஏழுமலை, புத்தூர் சதீஷ்குமார், கல்லுக்குழி பாலசுப்பிரமணி, முருகன், எடத்தெரு பாபு,அண்ணா ஆறுமுகம், சிவக்குமார்,சக்தி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் கருமண்டபம் பகுதி டி.ஆர்.சுரேஷ் குமார் நன்றி கூறினார்.

