மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில்
22.01.2023 இன்று மாநிலத்தலைவர் மரு.த.இராசலிங்கம் தலைமையில், மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், மாநில துணைத் தலைவர் முனைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
தொடக்கத்தில் டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி 10 ஆம் ஆண்டு நினைவு நாள் முன்னிட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களை திருச்சி மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் எல்.பாஸ்கரன் இயக்க செயல் பாடுகளைப் பற்றியும், தொடக்கவுரை ஆற்றினார். கூட்டத்தின் தீர்மானங்களை கூறினார்.
பெரம்பலூர் மாவட்டம் சிவக்குமார், வெங்கடாசலம்
,ரமேஷ், வைரமணி, கரூர் மாவட்டம் சுகுமார், முத்து, தூத்துக்குடி மாவட்டம் கந்தசாமி, வன்னியராஜா, தஞ்சை மாவட்டம் முருகானந்தம், ஜோசப் அமல்ராஜ், புதுக்கோட்டை மாவட்டம் ஆனந்தராஜ், கணேசன், செல்வகுமார் , மதுரை மாவட்டம் சேகர் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்ந்தார்கள் .
முடிவில் மக்கள் சக்தி இயக்கம் மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் நன்றி கூறினார்.