திமுக திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் மகளிர் அணி சார்பாக சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டம் தி மு க கிழக்குத் தொகுதியில் மகளிர் அணி சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று கிழக்குத் தொகுதியில் சமத்துவ பொங்கல் வைத்தனர் .

இந்த விழாவிற்கு கிழக்கு மாநகர செயலாளர்
மு. மதிவாணன் முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பொங்கல் பானை வைத்து அதில் பொங்கல் பொங்கி வரும் போது குலவை சத்தத்துடன் கும்மி பாட்டு பாடினர்.
இதனைத் தொடர்ந்து பெண்களுக்கான கோல போட்டி நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
கிழக்குத் தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொங்கல் பரிசு வழங்கி பொங்கல் வாழ்த்து கூறினார்
இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் மோகன் ‘ ராஜ்முகமது , மணிவேல் | விஜயகுமார், பாபு. மாமன்ற உறுப்பினர்கள் லீலாவேலு , பொற்கொடி மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பித்தனர்