Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சுற்றுச்சூழல் பயிலரங்கம்

0

'- Advertisement -

சுற்றுச்சுழல் பயிலரங்கம்.

திருச்சி ஜமால் முகமது கல்லூரி,மகளிர் பிரிவில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற விழிப்புணர்வு பயிலரங்கம் நடைபெற்றது.

தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் கே.சி.நீலமேகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிஷப்ஹீபர் கல்லூரி தமிழாய்வுத்துறை உதவிப் பேராசிரியர் மோகனப்பிரியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு இன்னும் அதிகரிக்க வேண்டும். சூழல் பாதுகாப்பில் பெண்கள் இயற்கைக்கு நெருக்கமானவர்கள். நாம் பருகும் தேநீரில் கலந்துள்ள மறைநீரைக் கணக்கிட்டாலே அதன் மதிப்பை சமூகம் உணர்ந்து கொள்ளும். அதுபோலவே ஒவ்வொரு பொருளின் மறைநீரைக் கொண்டு பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. நீரின் மதிப்பை உணராத சமூகம் பொருளியலில் பின்தங்கும். எனவே நீரையும், நீர்வளங்களையும் பாதுகாப்பது நமது கடமையாகும் என்றார்.

நிகழ்வில் நெகிழியை (பிளாஸ்டிக் கை) தவிர்ப்போம் , துணிப்பையை பயன்படுத்துவோம் என்ற விழிப்புணர்வு மாணவியரிடம் ஏற்படுத்தப்பட்டது. தண்ணீர் அமைப்பு செயலாளர் கி. சதிஷ்குமார், இணைச்செயலர் ஆர்.கே.ராஜா, தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெகனாரா உள்ளிட்ட மாணவியர்கள் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.